சென்னை:
மிழகத்தில் தங்கி உள்ள 75 இலங்கை அகதிகள் இன்று மீண்டும் தாயகம் திரும்புகிறார்கள்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக தமிழகம் வந்தனர். போரினால் உடல், உடமை அனைத்தும் பாதிக்கப்பட்டு அகதிகளாக தமிழக வந்த அவர்களை முகாம் அமைத்து, தமிழக அரசும், இந்திய அரசும் பாதுகாத்து வருகிறது.
Indian Refugee
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் தங்கி உள்ளனர். இந்தியா முழுவதும் 109 முகாம்களில் 64,000 இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மத்தியஅரசும், தமிழகஅரசும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி என பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு, இலங்கையில் மீண்டும் தமிழர்ள்க குடியேற வசதியாக இந்திய அரசின் சார்பில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்கு தேவையான உபகரணங்கள், தங்குவதற்கு வசதியாக அடுக்குமாடி குடியிருப்புகள், சாலை வசதி போன்ற ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ராஜபக்சே அரசு தோல்வியுற்று, அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப முன் வந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து மொத்தம் 75 தமிழ் அகதிகள்  இலங்கை செல்கிறார்கள். மதுரை முகாமிலிருந்து இருந்து 7 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும், திருச்சியில் இருந்து 31 பேரும் , சென்னையில் இருந்து 15 பேரும் விமானம் மூலம்  இன்று  இலங்கை புறப்பட்டுச் செல்கிறார்கள்
இன்று இலங்கை செல்லும் இவர்கள், இலங்கையில்  உள்ள தமிழர்கள் பகுதியான  மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திரிகோணமலை, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
விமான செலவை  ஐ.நா. சபையின் அகதிகள் பிரிவு தூதரகம் இலவசமாக செய்துள்ளது. மேலும்  ஒவ்வொருவருக்கும்.மீண்டும் குடியமர்வு செலவாக ரூ.5014ம்,  போக்குவரத்து செலவு ரூ.1270ம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் உணவு மானியமாக தலா ரூ.1270 வீதம்  வழங்கப்படுகிறது.
இலங்கையில் சிறிசேனா அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை 870 குடும்பங்களைச் சேர்ந்த 1,770 அகதிகள் இலங்கை திரும்பியுள்ளனர்.
இலங்கை திரும்ப விரும்புவோர் முறைப்படி இலங்கை துணை தூதரகத்தில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும். பாஸ்போர்ட்டுகளை தவறவிட்டு இருந்தால் புதிய பாஸ் போர்ட்டுகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.