சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று உச்சபட்சமாக 6993 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்து 20ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சோதனை அதிக அளவில் மேற்கொள்வதால், தொற்று அதிகமாக தெரிய வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மேலும் 6,993 அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 2,20,716 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95,857 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 5,723 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,62,249 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று மட்டும் 77 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,571 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 61,342 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 23,24,080 ஆக இருக்கின்றது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 117 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 54,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 23,24,080 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.99% ஆக உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63,250 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 6,993 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,33,930 ஆண்கள், 86,763 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.