விஜயவாடா

ன்று கர்நாடகாவில் 5,983 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 5,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 27,90,338 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 158 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 33,434 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 10,685 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,10,157 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,46,726 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,32,902 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 58 பேர் உயிர் இழந்து இதுவரை 12,167 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 7,728 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,50,904 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 69,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.