சென்னை:
தமிழகத்தில் இன்று 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து  மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் இன்று புதிதாக 5,864 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 98,767 ஆனது.
தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5,811 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 53 பேர்.
தமிழகத்தில் இன்று மேலும் 97 பேர் (அரசு மருத்துவமனை -65, தனியார் மருத்துவமனை -32) உயிரிழந்துள்ளனர். இதனால்  பலி எண்ணிக்கை 3,838 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 5,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,78,178 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 61,202 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 25,97,862 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 58 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 119 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இன்று ஒரே நாளில் 61,202 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 25,01,919