மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 58,952. மற்றும் டில்லியில் 17,282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 58,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 35,78,160 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 278 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 58,804 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 39,264 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,05,721 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,12,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
டில்லியில் இன்று 17,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 7,67,438 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 104 பேர் மரணம் அடைந்து இதுவரை 11,540 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 9,952 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,05,162 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 50,736 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.