சென்னை

ன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடு முழுவதும் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் என்பது கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும்..கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் திருநாள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

எனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.