சென்னை

ன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வெவ்வேறு நாட்களில் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்ற ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர்  உத்தரவிட்டார்.

இன்று மாலை இந்த 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் எம். ஜோதிராமன், குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை முதலில் வாசித்தார். பிறகு இந்த 5 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஒப்புதல் அளித்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை வாசித்தார்.

இதன் பிறகு ஒவ்வொரு நீதிபதிகளாகப் பதவி ஏற்க வர அவர்களுக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கல், வக்கீல்கள், இன்று பதவி ஏற்றுக் கொண்ட நீதிபதிகளின் உறவினர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.