மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 4,654 மற்றும் கேரளா மாநிலத்தில் 32,801 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 4,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 64,47,442 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,36,900 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,301 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 62,55,451 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 51,574 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 32,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 39,46,307 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 179 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,313 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 18,573 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,30,198 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,95,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.