மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 4,154 மற்றும் கேரளா மாநிலத்தில் 25,010 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 4,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 64,91,179 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 44 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,38,061 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 4,524 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 62,99,760 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 49,812 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 25,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 43,34,704 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 177 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 22,303 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 23,535 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 40,74,200 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,37,678 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.