மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 39,544. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 39,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 28,12,980 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 275 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 54,647 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 23,400 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 24,00,727 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,56,248 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,97,004 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 26 பேர் மரணம் அடைந்து இதுவரை 12,567 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,492 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,56,170 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 28,248 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.