புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் என்ற நிலைக்கு கொண்டுவருமாறு, மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து அதிகம் எடுத்துக்கொள்ளப்படாத பகுதிகளில், சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில், எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ, அங்கு தடையற்ற தடுப்பு மருந்து வழங்கலை உறுதிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இருப்பிலுள்ள தடுப்பு மருந்து கையிருப்பை சரியான முறையில் பயன்படுத்தி, மருந்து வீணாதலை தடுக்க வ‍ேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்தை இடம்விட்டு இடம் கொண்டு செல்வதிலும், சேகரிப்பதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, மாநிலங்கள், சேகரித்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் படிந்து வீணாகிவிடாமல் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.