சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேரை பலிவாங்கிய நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51,619 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1025 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தவர்களின், 50 வயதிற்கு கீழ் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையை தவிர்த்து, மற்ற மாநிலங்களில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 249-ஐ கடந்தது. தமிழகத்தில் 28 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தோரின் விகிதம், 1.31 ஆக உயர்ந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.