டில்லி
இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20,439 பேர், மற்றும் கேரளா மாநிலத்தில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 11,89,176 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 4,837 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 2,642 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,25,775 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 58,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 20,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 7,44,021 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 67 பேர் மரணம் அடைந்து இதுவரை 9,376 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 4,517 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 6,22,810 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 1,11,835 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.