சென்னையில் இன்று மேலும் 21 பேர் கொரோனாவுக்கு பலி…

Must read

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில், நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரையில்  27 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.  இதன் காரணமாக தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று மட்டும் மாலை 6 மணி நிலவரப்படி  39 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, மொத்த  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 461 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் 21 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்தனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 46 வயது ஆண், 77 வயது முதியவர் உட்பட 4பேர்  இறந்துள்ளனர்.

More articles

Latest article