சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 175 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,675 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,38,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று யாரும் உயிர் இழக்கவில்லை. இதுவரை 8,318 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 126 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,28,333 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,675 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 25,61,587 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 230 உடன் முதல் இடத்தில் உள்ளது.