சென்னை
தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,04,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்
இன்று தமிழகத்தில் 1,70,332 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,85,19,161 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 17,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து 2 பேர் வந்துள்ளனர். இதுவரை 22,92,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 405 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 28,170 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 31,253 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,59,597 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 2,04,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.