பாரதிராஜா
பாரதிராஜா

 
பாரதிராஜா  பிறந்தநாள் (1941)
அற்புதமான பல திரைப்படங்களைக் கொடுத்த கலைஞன். படப்பிடிப்பு தளங்களுக்கும் அடைபட்டிருந்த தமிழ்த்திரையுலகை,  சிறை மீட்டு வெளிக்கொணர்ந்தவர்களில் ஒருவர். ஏராளமான இயக்குநர்கள், கதாநாயகர்கள், நாயகிகள் திரைத்துறையில் மின்ன காரணமாக இருந்தவர். “இயக்குநர் இமயம்” என்று கொண்டாடப்படுபவர். தயாரிப்பாளர் ,  நடிகர்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று  மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியவர்.
கிராமத்து வெள்ளந்தி மனிதர்களை வெள்ளித்திரையில் உயிர்ப்புடன் உலவவிட்டவர். “பதினாறு வயதினிலே” திரைப்படத்தில் துவங்கிய இரது கிராமத்து பயணம், இடையிடையே ’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, என நகரத்து மலர்களையும் கொய்து வந்து ரசிகர்களுக்குத் தந்தது.
முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, என்று  மனிதரின் நுண்  உணர்வுகளை படம்பிடித்துக்காட்டும்  கலைஞன்.
இவரது சில படங்கள்,  பொதுமேடை பேச்சுக்கள், தனிநபர் தாக்குதல் போன்றவை குறித்து விமர்சனங்கள் உண்டு.  குறையில்லா மனிதர் யார்…?
இன்று 75ம் பிறந்தநாள் கொண்டாடும் பாரதிராஜா ,  அவர்களுக்கு  வாழ்த்துகள்!
(முகப்புப்படம்: பாரதிராஜா இயக்கிய “முதல் மரியாதை” படத்தில் ராதா, சிவாஜி கணேசன்)
.