டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,57,569 ஆக உயர்ந்து 1,49,886 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 16,278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,03,57,569 ஆகி உள்ளது.  நேற்று 200 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,49,886 ஆகி உள்ளது.  நேற்று 29,209 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 99,75,340 ஆகி உள்ளது.  தற்போது 2,28,088 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,47,011 ஆகி உள்ளது  நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,695 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,362 பேர் குணமடைந்து மொத்தம் 18,47,361 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 48,801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 600 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,22,538 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,110 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,283 பேர் குணமடைந்து மொத்தம் 9,00,202 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 128 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,83,210 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,118 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 252 பேர் குணமடைந்து மொத்தம் 8,73,149 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,943 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 838 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,21,650 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,166 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 985 பேர் குணமடைந்து மொத்தம் 8,01,414 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,970  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,021 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,78,874 ஆகி உள்ளது.  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,161 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,145 பேர் குணமடைந்து மொத்தம் 7,12,389 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.