மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 12.557 மற்றும் கர்நாடகாவில் 12,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 12,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 58,31,781 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 618 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,00,130 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 14,453 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 55,43,267 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,85,528 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கர்நாடகாவில் இன்று 12,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 26,95,523 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 320 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 31,580 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 25,659 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,09,417 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,54,505 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.