டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவர் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஏழு மத்திய அமைச்சர்கள் உள்பட 49 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த காலியிடங்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. 91 வயதாகும் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் மீண்டும் போட்டியிடவில்லை. தற்போது ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல். முருகன் மீண்டும் மாநிலக்ஙளவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மத்திய மந்திரிகள் இருவர் உள்பட 12 பேர் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அனைவரும் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இன்று பதவி ஏற்ற எம்.பி.க்கள் விவரம்
- தர்மஷிலா குப்தா
- மனோஜ் குமார் ஜா
- சஞ்சய் யாதவ்
- கோவிந்த்பாய் லால்ஜிபாய் தோலாகியா
- சுபாஷ் சந்தர்
- ஹர்ஷ் மகாஜன்
- ஜி.சி. சந்திரசேகர்
- எல்.முருகன்
- அசோக் சிங் சந்திரகாந்த்
- ஹந்தோர் மேதா
- விஸ்ராம் குல்கர்னி
- சாதனா சிங்