மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 10,066 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 10,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 59,97,687 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 508 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,19,303 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 11,032 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 57,53,290 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,21,859 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 12,787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 28,42,248 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 150 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,446 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 11,730 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,29,967 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 99,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.