சென்னை
இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் முகம் தொடங்க உள்ளது.
நாளுக்கு நாள் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. டெக்குவால் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4வயது சிறுவன் உயிர் இழந்தான். மேலும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அபிநிதி என்னும் திருப்பத்தூர் மாவட சிறுமி டெங்குவுக்கு பலி ஆகி உள்ளார்.
தினசரி சராசரியாக 30 பேர் வரி டெங்குவால் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழக அரசு டெங்கு பாதிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது இதில் ஒரு பகுதியாக இன்று தமிழக முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்க உள்ளன
இது குறித்து தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களிடம்,
”தமிழகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அரசு மற்றும் மருத்துவத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 363 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனிஅகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இதில் 54 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றன.
எனவே இன்று தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஆயிரம் காய்ச்சல் சிகிச்சை மற்றும் டெங்கு கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் சிறப்பாக நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நான் இன்று காலை 9 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் சீனிவாசபுரம் பகுதியில் நடைபெறும் முகாமை தொடங்கி வைக்கிறேன். இது போன்ற முகாம்கள் தொடர்ந்து அதாவது வடகிழக்கு பருவமழை முடியும் வரை நடத்தப்படும். அதே வேளையில் டெங்கு குறித்து பொதுமக்கள் மிகவும் பதறவேண்டாம் எனவும் நான் கேட்டுக் கொள்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.