சென்னை,

ன்று அதிகாலை முதலே மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் பலவந்தப்படுத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்க பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமைதியாக போராடும் எங்களை அப்புறப்படுத்திவிட்டு, யாரை பாதுகாக்கப்போகிறது போலீஸ் என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

மெரினாவுக்கு வரும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மவுன்ட்ரோடு, ராயப்பேட்டை, எழும்பூர், மைலாப்பூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இன்று காலை போராட்டக்காரர்களுக்கு கொடுக்க வந்திருந்த காலை உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டல்களை போலீசார் பறிமுதல் செய்து, போராட்டக்காரர்களுக்கு செல்லாத வாறு தடுத்தனர்.

அதிகாலை முதலே  அமைதியான முறையில் போராடி வந்த மாணவர்களையும், இளைஞர்களை யும், பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி கலைத்ததது போலீ்ஸ். பலரை தரதரவென இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.

இளைஞர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி செயலுக்கு, களத்தில் இருந்த இளம்பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இன்றுவரை எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருவது சரியல்ல. பெண்களையும் தரதரவென இழுத்து சென்ற செயல்  கடும் கண்டனத்துக்குரியது. இன்று காலை சாப்பிடுவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த உணவையும் கூட போலீஸார் விடவில்லை. அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

கடந்த ஒரு வாரமாக ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுக்கெல்லாம் மாணவர்களும், இளைஞர்களும் பாதுகாப்பாக இருந்தனர். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களை இப்படியா அப்புறப்படுத்துவது. யாருக்காக போலீஸ். மக்களுக்குத்தானே போலீஸ்.

அவர்களை விரட்டி விட்டு விட்டு யாரைப் பாதுகாக்கப் போகிறது போலீஸ். அமைச்சர்களுக்கு பாதுகாப்பு தரும் போலீஸ் மக்களை இப்படியா துரத்துவது.

இதுவரை,  மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அங்கு குப்பைகளே இல்லாமல் அற்புதமாக பார்த்துக் கொண்டனர். ஆனால் தற்போது மெரீனா கடற்கை போர்க்களம் போல காணப்படுகிறது.

இவ்வாறு பெண்கள் ஆவேசமாக கூறினர்.