திருவனந்தபுரம்

லகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க கேரள அரசு பிரேக் தி செயின் என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் நுழைந்துள்ளது.  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டார்.  அவர் சிகிச்சை முடிந்து பூரண குணம் பெற்ற போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து ஒருவர் என ஒரு சங்கிலித் தொடர் போல் பரவி வருகிறது.  அதனைத் தடுக்க அனைத்து மாநிலங்களிலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் கேரள மாநில சுகாதாரத்துறை பிரேக் தி செயின் என்னும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

கேரள அரசின் இந்த திட்டத்தின்படி அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பூத் ஒன்றை அமைக்கவேண்டும்.  அந்த வளாகத்தினுள் நுழையும் ஒவ்வொருவரும் கை சுத்திகரிப்பான் கொண்டு கையை சுத்தம் செய்துக் கொண்ட பிறகே வளாகத்தினுள் நுழைய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.