டில்லி:
நாட்டை காப்பதற்காக பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம் என்று ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக அணி திரண்டுள்ள எதிர்க்கட்சிகள், நடைபெறும் நாடாளு மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் வகையில் பல்வேறு வியூகங்கள் அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.
டில்லியில், பாஜவை விரட்டியடிக்க ஆம்ஆத்மி, காங்கிரஸ் இடையே தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை தொடர்ந்து வருகிறது. இடையே கூட்டணி குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலை ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் கட்ட வாக்குப்பதிவின்போது, பல இடங்களில் மின்னணி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நடைபெற்றது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, விவாதிப்பதற்காக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டில்லியில் நடை பெற்றது. அதில் கலந்துகொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியு மான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை தொடர்ந்து வருவதாக கூறியவர், நாடு தற்போது ஆபத்தில் உள்ளது. பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி இறுதி வரை தொடரும்.
இவ்வாறு கூறினார்.