சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைகள்  சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுடன், பாமக மற்றும் பாஜக கைகோர்த்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக சாடி வந்த பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பது நகைப்புரியதாக உள்ளது. இந்த கூட்டணி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதிமுக பாஜக கூட்டணி மற்றும் அதிமுக பாமக கூட்டணி குறித்த அறிவிப்பின் போது, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணி தொடரும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு பெரும்பான்மை இல்லாமல், எந்த நேரத்திலும் கவிழும் சூழல் உள்ளதால், அரசை காப்பற்றவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், பணத்திற்காக மட்டுமே பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும் கடுமையாக சாடி உள்ளார்.