மத்தியபிரதேசம்:
த்தியப்பிரதேசத்தில் கொரோனா பூஜை நடத்திய பாஜக அமைச்சர் மாஸ்க் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கொரோனா பரவாமல் இருக்க வேண்டி இந்தூர் ஏர்போர்ட் வளாகத்தில் பாஜக சுற்றுலாத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் மாஸ்க் அணியாமல் தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் சிலை முன்பு கைதட்டி பூஜை வழிபாடு மேற்கொண்டார்.இதில், விமான நிலைய இயக்குநர் ஆர்யாமா சன்யாஸ் மற்றும் பிற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரும்பாலும் மாஸ்க் அணியாமல் இருப்பது குறித்து முன்பு பதிலளித்த உஷா தாக்கூர் ஒவ்வொரு நாளும் ஹனுமான் மந்திரத்தை ஓதிக் கொண்டிருப்பதால் மாஸ்க் அணியத் தேவையில்லை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.