டெல்லி: கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் ஒரு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: வேட்பாளர்களும் நட்சத்திர பேச்சாளர்களும் முகக்கவசம் அணியாமல், போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து அரசியல் கட்சியினரும், முகக்கவசம் அணிந்து, அவ்வபோது கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை சுத்தப்படுத்தி, போதிய சமூக இடைவெளியை விட்டு தேர்தல் பேரணி மற்றும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.