பெங்களூரு

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி என அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.   இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.   கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் பல நகரங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை 9,78,478 பேர் பாதிக்கப்பட்டு அதில் 12,471 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,47,781 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 18,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் பெங்களூரு நகரில் மட்டும் இன்று 1,623 பேர் பாதிகபப்ட்டு மொத்த எண்ணிக்கை 4,22,859 பேர் ஆகி உள்ளது.  தற்போது 12,472 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் சுதாகர், பெங்களூருவில் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.  அதன்படி பெங்களூருவுக்குள் நுழையும் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அவர் அறிவித்துள்ளார்.  வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதி அமலுக்கு வர உள்ளது.