நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டத்தை அறிவித்தார் மோடி

Must read

புதுடெல்லி: 
நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க  ரூ. 100  கோடியில் புதிய திட்டம்  75 ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில்  தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி,  செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பின்னர் பேசிய பிரமதர் மோடி,  சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த போராட்டத் தியாகிகள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். நாட்டை உருவாக்கியவர்கள் வளர்ச்சியடையச் செய்த அனைவரையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க  ரூ. 100  கோடியில் மதிப்பில்  “பிரதமரின் கதி சக்தி திட்டம்”  என்ற பெயரிலான  புதிய திட்டம் செய்லப்டுத்தப்பட உள்ளதாகவும், இந்த திட்டம் மூலம் நாட்டில் தொழில்துறை மேலாண்மை, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் 8-ஆவது முறையாகச் சுதந்திர தின விழாவில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article