சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 2,800-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இன்றுமுதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மொத்தம் 20, 378 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதாவது, இன்று (அக்டோபர் 16) முதல் 19 வரை நான்கு நாட்களுக்குச் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் அக்டோபர் 20ந்தேதி உற்சாகமாகக் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிப் பயணம் செய்ய ஏதுவாக, 2,800-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் தசரதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் சிறப்புப் பேருந்துகள்!
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அக்டோபர் 16 முதல் 19 வரை நான்கு நாட்களுக்குச் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலா 82 பேருந்துகளும், நாளை 702 பேருந்துகளும், நாளை மறுதினம் (18ந்தேதி /சனி) 682 பேருந்துகளும், அக்டோபர் 19ந்தேதி (ஞாயிறு) 252 பேருந்துகளும் இயக்கப்படஉ ள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இந்தப் பேருந்துகள் புறப்படும் நடைமேடை விவரங்கள்:
நடைமேடை 5: திருச்சி, பெரம்பலூர், துறையூர், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை.
நடைமேடை 7: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம்.
நடைமேடை 8: அரியலூர், ஜெயங்கொண்டம்.
மண்டலங்களுக்கு இடையேயான சிறப்புப் பேருந்துகள்:
சென்னை தவிர, மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கு. மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு. அக்டோபர் 16 அன்று 150 கூடுதல் பேருந்துகளும், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய நாட்களில் 900 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி முடிந்து மக்கள் அவரவர் ஊர்களுக்குத் திரும்ப வசதியாக, அக்டோபர் 21, 22, மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களுக்கும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் சிரமமின்றிப் பயணிக்கவும், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏதுவாக, முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு வசதி உள்ள தடங்களின் பட்டியல்:
சென்னையிலிருந்து: திருச்சி, அரியலூர், கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்குடி, இராமநாதபுரம், திருவாரூர், வேளாங்கண்ணி உட்பட 14 வழித்தடங்கள்.
பிற நகரங்கள்: கோயம்புத்தூர் – திருச்சி, திருச்சி – இராமநாதபுரம், திருச்சி – கோயம்புத்தூர்.
ஏற்கனவே அரசு பஸ்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேரூந்துகளுடன், 760 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து 565 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதனிடையே , தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் 1,26,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதாவது 16ம் தேதி இன்று வியாழக்கிழமை 16,000 பேர், 17ம் தேதி வெள்ளிக்கிழமை 51, 500 பேர், 18ம் தேதி சனிக்கிழமை 47, 500 பேர், 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11, 500 பேர் என மொத்தம் 1,26,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலமாக அல்லது மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்து இந்தச் சிறப்புப் பேருந்து வசதியைப் பயன்படுத்திக்கொள்ளு மாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்து இயக்கம் குறித்து 94459 14436 என்ற எண்ணை எந்த நேரமும் அழைக்கலாம்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் அழைக்கலாம்.
044-24749002, 044-2628 0445, 044-26281611 எண்களிலும் பயணிகள் புகார்களை தெரிவிக்கலாம் – போக்குவரத்து
முக்கியப் பேருந்து நிலையங்களில் பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.