லண்டன்: 
மிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற  மாணவிக்கு “எர்த்ஷார்ட் விருது” வழங்கப்பட உள்ளது.
சுற்றுச்சுழலைப் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வு வழங்குபவர்களுக்குக் கடந்த ஆண்டு முதல் “எர்த்ஷார்ட் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மாணவி வினிஷா இந்த விருது பட்டியலில் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் 14 வயது வினிஷா உமாசங்கர். இவர் சுற்றுச்சுழலைப் பாதிக்காத சூரிய ஒளியில் இயங்கும் சூரியசக்தி சலவைப் பேட்டி வண்டியை உருவாக்கியுள்ளார். இந்த சாதனைக்காக அவருக்கு “எர்த்ஷார்ட் விருது” வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளது குறித்து வினிஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! இன்று, இளவரசர் வில்லியம் வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய சுற்றுச்சூழல் பரிசான தி எர்த்ஷாட் பரிசின் முதல் இறுதிப் போட்டியாளர்களில் நானும் ஒருவன் என்று அறிவித்தார்.
வினிஷா மற்றும் வித்யுத், பங்களாதேஷ், சீனா, நைஜீரியா, கோஸ்டாரிகா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த 13 இறுதிப் போட்டியாளர்கள் இதில் விருது பெற உள்ளனர்.
750 -க்கும் மேற்பட்ட  நீண்ட பட்டியலிடப்பட்ட பரிந்துரைகள் பின்னர் உலகளாவிய நிபுணர் ஆலோசனைக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டன. அறிவிக்கப்பட்ட இந்த 15 இறுதிப் போட்டியாளர்களில், ஐந்து பேருக்கு ஐந்து பிரிவுகளில் எர்த்ஷாட் பரிசு வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு வரும்  அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி  அன்று லண்டனில் உள்ள அலெக்ஸாண்டரா அரண்மனையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும்.