சென்னை:  டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படிடி, ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான  டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த முறை கூடுதலாக தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பதவிக்கும் குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 1-ல் 70 பணியிடங்களுக்கும் குரூப் 1 ஏ-ல் 2 பணியிடங்களை நிரப்பவும் தேர்வு நடைபெறுகிறது.

குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,  . விண்ணப்பங்களில் மே 5 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்  என்றும்,  ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு குடிமை பணியில் 28 துணை ஆட்சியர் பணியிடங்களும், தமிழ்நாடு காவல் பணியில் 7 துணை காவல் கண்காணிப்பாளர் பணியிடங்களும், தமிழ்நாடு வணிக வரி பணியில் 19 துணை ஆணையர் பணியிடங்களும் , தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பணியில் 7 உதவி இயக்குநர் பணியிடங்களும், தமிழ்நாடு பொதுப்பணியில் 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்களும், தமிழ்நாடு தொழிலாளர் பணியில் 6 உதவி ஆணையர் பணியிடங்களும் என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

அதுபோன்று குரூப் 1ஏ தேர்வில் தமிழ்நாடு வனப்பணியில் உதவி வன பாதுகாவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு மற்றும் கல்வி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Com. B.L, ஆகிய துறைகளிலும், காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் ஊரகப் பணிகளில் முதுகலை பட்டம், விரிவாக்கவியலில் முதுகலை பட்டம் அல்லது பட்டயம் சமூகவியலில் முதுகலை பட்டம் அல்லது பட்டயம் என பணியிடங்களுக்கு ஏற்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01/04/2025

இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 30.04.2025

விண்ணப்பங்களை திருத்துவதற்கான காலம் : 05.05.2025 முதல் 07.05.2025 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்.

தேர்வு எப்போது?

முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் நடைபெறும்.

இதில் முதல் நிலைத் தேர்வு 15.06.2025அன்று நடைபெறும். இந்த தேர்வு முடிவுகள் வெளியானதும், முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும்.

முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் முன் கணினிவழித்திரையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பின்போது நிராகரிக்கப்பட்ட தேர்வர்கள் மற்றும் கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஆவணங்களை பதிவேற்றம் செய்யத் தவறிய தேர்வர்களுக்கு பதிலாக கூடுதல் பட்டியல் ஏதும் வெளியிடப்படமாட்டாது.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

தேர்வர்கள் www.tnpscexams.in எனும் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (OTR) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.