சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப்2ஏ முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், முறைகேடு தொடர்பாக 2 காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக பத்திரப்பதிவு துறை ஊழியர்கள் ஜெயராணி, வேல்முருகன், சுதா, ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்து தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.