சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலை தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.

அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர், வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21/07.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 16.2022-ல் 30.10.2022 முற்பகல் அன்று நடைபெறும்  என அறிவிக்கப்பட்டிருந்த 2022, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1) முதனிலைத் தேர்வானது, நிர்வாக காரணங்களுக்க 19-11-22 முற்பகல் அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.