காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் நடுவே இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்களுக்கு பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது என்று கூறினார்.

அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் அனைத்தும் தற்போது ஆளும் பாஜக-வின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

அதை எதிர்க்க வேண்டிய கடமை எதிர்கட்சிக்கு இருக்கிறது இது ஒரு அரசியல் கட்சிக்கும் மற்றொரு அரசியல் கட்சிக்குமான போராட்டமல்ல தற்போதைய இந்திய அரசியல் கட்டமைப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் போராட்டம்.

இந்தப் போராட்டத்தில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன், ஆனால் சிலருக்கு பாஜக-வை எதிர்ப்பதை விட அவர்கள் முன் கைகட்டி நிற்பது சுலபமான வெளியாக இருக்கிறது என்று கூறினார்.