சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு முடிவுகள்செப்டம்பர் 2ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. 50நாளில் தேர்வு முடிவுகள் வெளியானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுகின்றன.. அதன்படி, குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியாது. இதில், குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் – 16 பணியிடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) – 23 பணியிடங்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர் – 14 பணியிடங்கள், கூட்டுறவு துறை துணை பதிவாளர் – 21 பணியிடங்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் – 14 பணியிடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி – ஒரு பணியிடம், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி – ஒரு பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிட்டது.
அந்த வகையில், மொத்தம் 90 காலியிடங்களுக்கான குருப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியின்மை காரணமாக 8 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, குரூப் 1 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. குரூப் 1 முதல்நிலை தேர்வை 1,59,887 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவர்.
இந்நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிந்த 50 நாட்களிலேயே செப்டம்ப 2ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/04_2024_GR_I_PRLM.pdf என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவெண்கள் அனைத்தும் முதன்மைத் தேர்வை எழுதத் தகுதி ஆனவை ஆகும். இதையடுத்து குரூப் 1 முதன்மைத் தேர்வு, டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி சென்னை எழும்பூரில் நடைபெற உள்ளது. தேர்வை எழுத உள்ளவர்கள், கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.