சென்னை:
தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில், இடைத்தரகராக செயல்பட்டு வந்த, தலைமறைவவு குற்றவாளி ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
தமிழகஅரசு பணிகளுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு பணியாளர் நடத்தில் தேர்வில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றது வெளிச்சத்தக்கு வந்துள்ளது. கடந்த நடத்தப்பட்ட குரூப்-4 மற்றும் ஏற்கனவே நடத்தப்பட்ட ரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது.
இது தொடர்பாக அரசு அதிகாரிகள், கோச்சிங் நிறுவனங்கள், அவர்களுக்கு உதவியாக செயல்பட்ட காவலர்கள் சித்தாண்டி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் தலைமறைவாகி இருந்தார்.
இவரை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில்தான், எத்தனை ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகிறது, எந்தெந்த அதிகாரிகள், அமைச்சர்களுக்கு இந்த முறைகேடுகள் உள்ளது என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.