சென்னை; மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு தியை  டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில்,   தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் தகுதித் தோ்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கி உள்ளது.  விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 2ந்தேதி.

தமிழ் தகுதித் தோ்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு ஆகியன முதல் தாளாகவும், தொழில்பிரிவு தோ்வு 2-ஆவது தாளாகவும் நவ.16-ஆம் தேதி நடக்கவுள்ளது.

தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக்கான உச்சவயது வரம்பு 32 ஆகும்.

நிா்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 42,, முன்னாள் ராணுவத்தினருக்கு 50, ஆதரவற்ற விதவைகளுக்கு 37 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.