நெல்லை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், திருச்சி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
டிஎன்பிஎல் தொடரில் இன்று மதியம் 3.15 மணிக்கு நெல்லையில் நடக்க உள்ள போட்டியில் மதுரை – சேப்பாக் அணிகளும், இரவு 7.15 மணிக்கு நெல்லையில் நடக்க போட்டியில் சேலம், நெல்லை அணிகளும் மோத உள்ளன.