சென்னை: தமிழ்நாடு மின்சாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பாமக தலைவர் அன்புமணி, மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனை என்றும் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட டிரான்ஸ்பார்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே குற்றம் சாட்டியது. இதுதொடர்பான டென்டரில போட்டியிட்ட அனைவரும் ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைக்கப்படுகிறார்கள். ஒரே விலைக்கு டெண்டர் கொடுத்தவர்களிடம் கூடி பேசி ஆளுக்கு கொஞ்சம் டெண்டர் சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு முடிவு செய்யப்பட்டு பிரித்து கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில், இந்த மோசடியை ஒருங்கிணைத்த காசி என்ற மின்துறை ஊழியரை பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு பணி உயர்வு கொடுத்து கவுரவித்துள்ளார். இதையும் அறப்போர் இயக்கம் கண்டித்துள்ளது.
இந்த நிலையில், மின்சாரத்துறையனல் மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது. இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக . பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45 ஆயிரத்து 800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி புகார் அளித்தது.
இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கை யையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக் கையுடன் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை தி.மு.க. அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.
மின்மாற்றி ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் பேரம் என மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் தி.மு.க. அரசின் சாதனையாகும்.
மின்மாற்றிக் கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக அவர்களுக்கு சன்மானம் வழங்கும் .
தி.மு.க. ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
எனவே, மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல்கள், கூட்டுச் சதிகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
