சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (22-07-24) ஆன்லைன் வாயிலாக தொடங்குகிறது. மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வை தொடங்கி வைக்கிறார்.
முதல்நாளான நாளை, சிறப்பு பிரிவில் அரசு பள்ளிகளை படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. முதல்நாள் 713 இடங்களுக்கு கலந்தாய்வில், 404 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் உள்ள 2,33,376 பி.இ, பி.டெக் இ்டங்கள் உள்ளன. இந்த இடங்களுங்ககான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. முன்னதாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்ஙகள் ,. கடந்த மே மாதம் 6ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 12ம் தேதி வரை நடந்தது. இந்த படிப்புக்கும், மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியிட்டப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் அனுமதித்த இடங்களில், மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தேதி தொடங்கி செப்டம்பர் 3 ம் தேதி நிறைவு பெறவுள்ளது.
அதன்படி, முதல் நாளான நாளை விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியருக்கான சிறப்பு பிரிவில் பிரிவின்கீழ் உள்ள சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்க உள்ளார்.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22, 23 ந் தேதி நடக்கிறது. இதில் விளையாட்டுப் பிரவில் உள்ள 38 இடங்களுக்கு 282 விளையாட்டு வீரர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 11 இடங்களுக்கு 11 பேரும்,
மாற்றுதிறனாளிகளுக்கான 664 மாணவர்கள் 111 பேரும் விண்ணப்பித்து தகுதி பெற்றுள்ளனர்.
713 இடங்களுக்கு 404 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யவுள்ளனர்.
அதன்படி, நாளை கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கான விருப்பப்பட்டியில் அடிப்படையில் இரவு 9 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
அவ்வாறு ஒதுக்கப்படும் தற்காலிக இடங்களை 23ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதை தொடர்ந்து 23ம் தேதி இரவு 9 மணிக்கு மாணவர்கள் இறுதி ஆணை வெளியிடப்படும்.
தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவினர்களுக்கு ஜூலை 25ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.
இதில் மாற்றுதிறனாளி பிரிவில் 403 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1220 பேரும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 2112 பேரும் தகுதிப் பெற்றுள்ளனர்.
அதேபோல் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து 29ம் தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.