கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் கடந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு 16-ந்தேதியுடன் முடிவடைந்த காலக்கட்டத்தில், பொறியியல் படிப்புக்கு 1லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ள்னர். அவர்களில், 1லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருப்பதாக வும், இன்னும் 29 ஆயிரத்து 398 பேர் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாகவும், 1லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து இருப்பதாக வும் உயர் கல்வித்துறை அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று மாலை வெளியிடப்படும் என்றும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை 4 மணி அளவில், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே ரேண்டம் எண் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.