சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு 4வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கில் இருந்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று நோயின் பாதிப்பு உச்சத்தை எட்டி உள்ளது.
இன்று ஒரேநாளில் 938 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல, கொரோனா நோயில் இருந்து 687 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 12ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டுள்ள 938 பேரில், 616 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9021 ஆக உள்ளது.
இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களில் 566 பேரின் சோதனை முடிவுகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 82 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
அவர்களில் 3 பேர் குவைத்திலும், 3 பேர் டெல்லி, 7 பேர் குஜராத், 46 பேர் மகாராஷ்டிரா, மேற்குவங்கம் 12, ஜார்கண்ட் 2, மத்தியபிரதேசம் 1, உ.பி 2,, ஆந்திரா 1, 3 பேர் கர்நாடகா.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.