சென்னை:

ந்தியை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்து  பி்ரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதுவார் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மத்தியில் மோடி தலைமையிலான மத்தியஅரசு மீண்டும் பதவி ஏற்றதும், நாடு முழுவதும் இந்தி மொழியை திணிக்கும் வகையில் இரு மொழி  கொள்கை குறித்து, புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டது.

அதில், மாநில மொழியுடன், இந்தி மொழி கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உருவாக்கியதுடன், தமிழக அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.   அதைத்தொடர்ந்து #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்காகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நலையில்,  மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம்   இல்லை. மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வெறும் வரைவு அறிக்கைதான். அதுகுறித்து  சம்மந்தப்பட்ட பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்படும். மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும். அதன்பிறகே, இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் தற்போது பல்கலைக்கழக மானிய குழு மூலம், இளநிலை கல்லூரி பட்டம் பெற இந்திய அவசியம் என்று சுற்றிக்கையை அனுப்பி, இந்தியை திணிப்பதில்  மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,  மத்திய அரசு வரைவு அறிக்கை  வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி பி்ரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில்  மும்மொழி கல்வி கொள்கை என்பதே  தமிழக அரசின் நிலைப்பாடு, இதுகுறத்து தமிழக முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.