சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்து 25 இடங்களில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுதுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது திமுக நேரடியாக 125 இடங்களை கைப்பற்றி  தனி பெரும்பான்மை பெற்றுள்ளது.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  வரும் 7ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விசிக 4  இடங்களிலும், சிபிஐ 2, சிபிஎம் 2, மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள் – வேட்பாளர் விவரம்:

1 விளவங்கோடு – திருமதி . விஜயதாரணி
2 ஸ்ரீபெரும்புதூர்(தனி) – திரு.கு.செல்வபெருந்தகை
3 குளச்சல் – திரு.J.G.பிரின்ஸ்
4 கிள்ளியூர் – திரு. S.ராஜேஷ்குமார்
5 உதகை – திரு. R.கணேஷ்
6 நாங்குநேரி – திரு. ரூபி ஆர். மனோகரன்
7 சோளிங்கர் – திரு.A.M.முனிரத்னம்
8 பொன்னேரி (தனி) – திரு.துரை சந்திரசேகர்
9 திருவாடானை – திரு. கருமாணிக்கம்
10 மயிலாடுதுறை – திரு. ராஜகுமார்
11 காரைக்குடி -திரு. S. மாங்குடி
12 அறந்தாங்கி -திரு S.T. ராமசந்திரன்
13 வேளச்சேரி – திரு.J.M.H ஹாசன்
14 ஈரோடு (கிழக்கு) – திரு. திருமகன் ஈவேரா
15 சிவகாசி – திரு.A.M.S.G அசோகன்
16 ஸ்ரீவைகுண்டம் – திரு. ஊர்வசி எஸ். அமிர்தராஸ்
17 தென்காசி – திரு. S பழனி நாடார்,
18 விருத்தாச்சலம் -திரு. M.R.R ராதாகிருஷ்ணன்
பாராளுமன்ற இடைத்தேர்தல்
19 கன்னியாகுமரி – திரு விஜய் வசந்த்

ஆகிய காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.