சென்னை

மிழக போக்குவரத்துதுறைக்கு ரு. 18178 கோடி கடன் உள்ளதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Close up photograph of department of transportation sign on building.

நேற்றைய சட்டப்பேரவை தொடரில் தமிழக பேருந்து கட்டணம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன, இதற்கு தமிழக போக்குவரத்துத் துறை தனது கொள்கை விளக்க குறிப்பு மூலம் பதில் அளித்துள்ளது.

அதில்,

’தமிழகத்தில் பேருந்து கட்டணம் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவகவே உள்ளது/

தமிழகத்தில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் திருத்தி அமைக்கபட்டது.

ஆனால் கர்நாடகாவில் கட்ந்த 2020 ஆம் ஆண்டில் பேருந்து கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திராவில் கட்ந்த 2022 ஆம் ஆண்டில் பேருந்து கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக போக்குவரத்துதுறைக்கு ரூ.18178 கோடி கடன் உள்ளது.

இத்தைகைய கடும் நிதி நெருக்கடியிலும் தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை வழங்கப்படுகிறது”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.