சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வரும் உதவிப் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன், நடன பயிற்சியாளர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் நேற்று முதல் 2 நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனை அடுத்து ஏப்ரல் 6 வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாணவிகள் மீதான பாலியல் வன்முறை குறித்து மாநில மகளிர் ஆணையர் ஏ.எஸ்.குமாரி இன்று கலாக்ஷேத்ரா-வுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார்.
கலாஷேத்ரா பவுண்டேஷன் பாலியல் விவகாரம் தொடர்பாக 12 பேரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தியதில் 4 பேர் மீது புகார் அளித்துள்ளனர் என்று மாநில மகளிர் ஆணையர் ஏ.எஸ்.குமாரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மேலும், இது தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.