சென்னை

டி எம் போல தமிழக ரேஷன் கடைகளில் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வசதி ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது

பொதுமக்களுக்கு ரேஷன்கடைகளில்  நியாய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவது ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையில் அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் ரேசன் கடைகளில் வழங்கப்படுவதுடன் அங்கு வேஷ்டி, சேலையும் வழங்கப்படுகிறது.

வங்கி ஏடிஎம் க்கு செல்லாமல் ரேஷன் கடைகளிலேயே வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் தமிழக் கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த முறை ஏடிஎம், வங்கிகளுக்கு செல்லமுடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

னைத்து நியாயவிலைக் கடைகளிலும் பயோமெட்ரிக் முறையில் இயங்கக்கூடிய டிஜிட்டல் கருவிகோர் பேங்கிங் சேவைகளை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். கருவிகள் நிறுவப்பட்டு, அதற்கென ஒரு வங்கி ஊழியர் பணி அமர்த்தப்படுவார்.  கூட்டுறவு சங்க பதிவாளர் இதற்கான் ரேஷன் கடைகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.