அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. ,  தமிழ்நாடு

தல சிறப்பு :

சோழர்களால் கட்டப்பட்ட கோயில்.

பொது தகவல் :

கோயிலில் மகா மண்டபம் அமைந்துள்ளது. மற்றும் கோயில் பிரகாரத்தில காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன.

தலபெருமை :

இங்கே, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும், பொருளையும் வாரி வழங்கும் அன்னையாகத் திகழ்கிறாள் அரியநாச்சி அம்மன். செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து அம்மனைத் தரிசித்துப் பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம் ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய் வெள்ளி என்றில்லாமல் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர், மேலும், இந்த மாதத்தில் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் பவுர்ணமி தோறும் லட்சார்ச்சனையும் திருவிளக்கு பூஜையும் இங்கு நடைபெறுவது சிறப்பு, இங்கே உள்ள நாகர் விக்கிரகத்துக்குப் பாலபிஷேகம் செய்து அம்மனை வேண்டிக்கொண்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு :

குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்நாத சுவாமி ஆலயம் கட்டினான் சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில் அருகிலேயே அம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைப்பது என முடிவு செய்தான். அதன்படி சிவன் கோயிலுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது அரியநாச்சி அம்மன் ஆலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் என்றாலும் அயைடுத்து இந்தப் பகுதியை ஆட்சி செய்த பாண்டியர்களும் இந்தக் கோயில் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவந்தங்கள் அளித்துள்ளனர். எனவே, பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்மனின் அருளைக் கண்டு வியந்த பல்லவ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, பல்லவர்களும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது தல வரலாறு.

திருவிழா :

ஆடி மாதம், பவுர்ணமி.

பிரார்த்தனை :

திருமணத் தடை நீங்க, பிள்ளை பாக்கியம் கிடைக்க, தோஷங்கள் விலகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

ராகு கால வேளையில் அரளிமாலை சார்த்தி நெய்தீபமேற்றி வழிபட்டும். தங்கம் அல்லது வெள்ளியில் பொட்டு வாங்கி, அம்மனிடம் வேண்டிப் பிரார்த்தித்து கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்திவிட்டு ஆலமரம் மற்றும் வேம்புமரம் ஆகியவை சேர்ந்திருக்கும் மரங்களைச் சுற்றிப் பிராகாரம் வந்து, மஞ்சள் சரடை மரத்தில் கட்டிவிட்டு மனதாரப் பிரார்த்தனை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.